வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்
சேலம் மாவட்ட காலியிடங்கள்: 56
விழுப்புரம் மாவட்ட காலியிடங்கள்: 114
திருப்பூர் மாவட்ட காலியிடங்கள்: 73

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சேலம் மாவட்ட விண்ணப்பத்தாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  மண்டல இணைஇயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், பிரட்ஸ்ரோடு, சேலம் - 636 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2018

திருப்பூர் மாவட்ட விண்ணப்பத்தாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, 4/83, பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு, திருப்பூர் - 641 605

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.02.2018

விழுப்புரம் மாவட்ட விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், விழும்புரம் - 605 602

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய சேலம் http://salem.tn.nic.in/pdf/aha_interview.pdf, விழுப்புரம் http://viluppuram.tn.nic.in/pdf/AHA_Application.pdf, திருப்பூர் http://tiruppur.tn.nic.in/dept_pdf/ahvs.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம் அல்லது www.Tiruppur.tn.nic.in, www.viluppuram.tn.nic.in, www.Salem.tn.nic.in என்ற அதிகார்ப்பூர்வ இணையதள்த்தில் சென்றும் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிக் கட்சி தொடங்கமாட்டேன் - ஓ. பன்னீா்செல்வம்

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

SCROLL FOR NEXT