வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கு பிப்.9க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தினமணி

தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் டேன்செட் (TNSET) எனப்படும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தகுதித் தேர்வை கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

தற்போது 2018-ஆம் ஆண்டிற்கான 26 துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 தேர்வு மையங்களி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி: வேதி அறிவியல், வணிகம், கணினி அறிவியல் மற்றும் அப்ளிகேசன், பொருளாதாரம், கல்வி, எலக்ட்ரானிக்ஸ், ஆங்கிலம், ஜியோ கிராபி, இந்தி, வரலாறு, ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேசன், சட்டம், சான்ஸ்கிரிட், நிர்வாகவியல், தமிழ், தெலுங்கு, சமூகவியல், உளவியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி அறிவியல், நூலக அறிவியல், புவி அறிவியல் உள்ளிட்ட 26 பாடத்துறைகளில் முதுநிலைப்படிப்பு அல்லது முதுகலை படிப்புடன் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.500 கட்டணமும், ஓபிசி நான் கிரீமிலேயர் பிரிவினர் ரூ.1250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2018 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.03.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.motherteresawomenuniv.ac.in/TNSET%202018/Final_TNSET_2018_Notification(12.12.2017).pdf மற்றும் www.tnsetexam2018mtwu.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரி்ந்துகொண்டு விண்ணப்பிக்கவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT