வேலைவாய்ப்பு

பால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால்வளத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 11 மஸ்தூர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால்வளத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 11 மஸ்தூர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: கால அளவு மஸ்தூர்

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடினமான பணிகளை செய்யும் வகையில் உடல் திறன் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு சென்னை மாதவரத்தில் உள்ள பால்பண்ணை அலுவலகத்தில் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnddd.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம், பால்பண்ணை. சென்னை - 51

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnddd.in/2018%20TSM%20application%2010.10.18 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT