வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தினமணி


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் மவுலான ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (Maulana Azad National Institute of Technology) அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 144 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor Grade - II
காலியிடங்கள்: 69
சம்பளம்: மாதம் ரூ.70.900

பணி: Associate Professor
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.1,39,600

பணி: Professor
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.1,59,100

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இசிஇ, சிஎஸ்இ போன்ற பிரிவுகளில் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் யூஜிசி விதிமுறைகளின்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 2 ஆண் ரயில் கட்டணம் வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.manit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2019

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT