வேலைவாய்ப்பு

பேராசிரியர் பணி வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

தினமணி


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும். 

பணி: Assistant Professors

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.1,01,500

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஜிப்மர் விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Embryologist in Obstetrics & Gynaecology

காலியிடங்கள்: 01

தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் அல்லது லைப் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று Embryologist ஆக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, ஜிப்மர் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Administrative Block, JIPMER, Puducherry. 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.08.2019

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி வரைவோலை மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT