வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கால்நடைத்துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் வேலை

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

தினமணி


தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திதிருக்க வேண்டும். 

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.19.500 - 62000
தகுதி: 8 ஆம் வதுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  வயதுவரம்பு சலுகை கோருபவருக்கு கோருபவர்களுக்கு அரசுவிதிகளின்  சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணுப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு  நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Driver_advt_application_021219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு

காமதேனு கல்லூரியில் நாடக கல்வியியல் பயிற்சிப் பட்டறை

பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!

மூதாட்டி கொலை: யாசகா் கைது

SCROLL FOR NEXT