வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? ரயில்வேயில் 4429 பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

தினமணி


தென்னக ரயில்வேயின் கோவை, திருச்சி மற்றும் சென்னையில் காலியாக உள்ள 4429 பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசியாகும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிடுயுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகதியானவர்கள். 

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

மொத்த காலியிடங்கள்: 4429

கோவை - 2652

திருச்சி - 853

சென்னை- 924

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை கொண்ட பிரிவுகளில் பிளஸ் டூ  முடித்தவர்கள் மருத்துவ ஆய்வக பயிற்சிக்கு (எம்எல்டி) விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். '

உதவித்தொகை: பயிற்சின்பொது முதல் ஆண்டும் மாதம் ரூ.5,700, இரண்டாம் ஆண்டும் மாதம் ரூ.6,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.7,350 உதவித்தொகையாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Perambur.pdf,  http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Ponmalai.pdf மற்றும் http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Podanur.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT