வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... உரத் தொழிற்சாலையில் பாய்லர் பொறியாளர் வேலை

தினமணி


மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ராஷ்டிரீய கெமிக்கல் மற்றும் உரத் தொழிற்சாலையில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 பாய்லர் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Boiler Proficiency Engineer -E1

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பாய்லர் ஆப்ரேஷன் இன்ஜினியரிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பகத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்திய செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Office of Dy.General Manager(HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room no.206, Administrative Building, Chembur, Mumbai - 400 074.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.rcfitd.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT