வேலைவாய்ப்பு

வன ஆராய்ச்சி அலுவலகத்தில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள எம்டிசி மற்றும் எல்டிசி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300. எஸ்சி, எஸ்டி, இசிஎம் மற்றும் பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை Director, IFGTB என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb.icfre.gov என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, B.S. Puram, Coimbatore - 641002 (T.N).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT