வேலை வேண்டுமா? மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை
சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புவேலை வேண்டுமா? மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை
சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Chennai Medical and Rural Welfare Directorate
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்: 25
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது இவ்வலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர் சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2020
மேலும் விவரங்கள் அறிய https://chennai.nic.in/advertising-report-for-the-post-of-office-assistant-analyst-in-the-office-of-the-medical-and-rural-welfare-directorate/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.