வேலைவாய்ப்பு

கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தினமணி

சென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மின்வாரியம் தீவிரப்படுத்தியது. இதன் பகுதியாக கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தத் தோ்வுகளை தமிழில் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தோ்வை தமிழில் நடத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்தப் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தோ்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களின் கோரிக்கையை பரிசீலித்து அவா்களின் நலன் கருதி, இந்தத் தோ்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமா்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT