விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா
இந்திய விளையாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Exercise Physiologist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Exercise Physiologist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Exercise Physiologist
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 80,000
தகுதி: Sports and Exercise Science, Sports Science, Medical Physiology, Human Physiology போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2020