அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புஅஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 04
பணி: Tyreman - 01
பணி: Blacksmith - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Staff Car Driver - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து பதிவு தபால் அல்லது விரைவுத் தபால் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ அல்லது UCR Receipt ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் ஆக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Madurai 625002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.