வேலைவாய்ப்பு

ரூ.44,500 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்ப்பட உள்ள செவிலியர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி


பொதுத்துறை நிறுவமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்ப்பட உள்ள செவிலியர், உதவித்தொகை பயிற்சியாளர், பார்மசிஸ்ட், தொழில்நுட்ப வல்லுநர், உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் போன்ற பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 72

விளம்பர எண். NAPS/HRM/01/2021

நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited (NPCIL)

பணி: Nurse - A - 05
பணி: Stipendiary Trainee/ Scientific Assistant - 09
பணி: Pharmacist/B - 01
பணி: Operation Theatre Assistant (Technician/B) - 01
பணி: Stipendiary Trainee (ST/TM) Operator (Cat-II) - 18
பணி: Stipendiary Trainee (ST/TM) Maintainer (Cat-II) - 24
பணி: Assistant Grade-1(HR) - 04
பணி: Assistant Grade-1(F&A) - 03
பணி: Assistant Grade-1(C&MM) - 05
பணி: Steno Grade-1 - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள், மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருப்பவர்கள், ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,500 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படுகிறது. 

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 18 முதல் 28க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/NAPS2021/documents/advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

SCROLL FOR NEXT