வேலைவாய்ப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நகல் எண்.இ2/3793/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
சம்பளம்:  மாதம் ரூ.2,410 + அகவிலைப்படி 

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தாவரவியல், விலங்கியல், வேதியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: பருவகால காவலர்
சம்பளம்: மாதம் ரூ.2,359 + அகவிலைப்படி

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்கள் விவரம்: 
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 22.12.2021 அன்று காலை 11 மணிக்கும், பருவகால காவலர் பணிக்கு 23.12.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மண்டல அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர், தொலைபேசி எண். 0421-2217627, 2217616

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தினா் 48 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்

மூதாட்டியிடம் நகைப் பறித்தவா் கைது

சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு சீல்

SCROLL FOR NEXT