வேலைவாய்ப்பு

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள 16 விஞ்ஞானி 'பி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள 
16 விஞ்ஞானி 'பி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் வாய்ப்பினை பொறியியல் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.  

விளம்பர எண்: NIELIT/NDL/MeitY/2021/3

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT) 

பணி : Scientist ‘B’ GROUP -A

காலியிடங்கள் : 16 

தகுதி : பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள துறையில் பி.இ,, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100  - ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://recruit-delhi.nielit.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது விண்ணப்பதாரர்கள் ரூ.800 எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2022 

மேலும் விபரங்கள் அறிய www.nielit.gov.in அல்லது https://recruit-delhi.nielit.gov.in/PDF/MeitY/MeitY_Full%20Adv2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT