வேலைவாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா அரசு வழக்காடல் துறையில் வேலை

தினமணி



தமிழக அரசின் வழக்காடல் துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: Tamilnadu Litigation Department

மொத்த காலியிடங்கள்: 16

பணியிடம்: சென்னை மற்றும் மதுரை

பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
 
வயதுவரம்பு: 01.06.2020 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயது மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ரூ.45 அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் "அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104" 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT