வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை

தினமணி


வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 322 கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

மொத்த காலியிடங்கள்: 322

விளம்பர எண். 1A /2020-21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Officers in Grade ‘B’(DR)- General 
காலியிடங்கள்: 270

பணி: Officers in Grade ‘B’(DR)- DEPR 
காலியிடங்கள்: 29

பணி: Officers in Grade ‘B’(DR)- DSIM  
காலியிடங்கள்: 23

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள்,கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், கணித பொருளாதாரம், ஒருங்கிணைந்த பொருளாதாரம்,  நிதி போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 1.01.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.35,150 - 50,900

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in, https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT