முகப்பு
வேலைவாய்ப்பு

என்பிசிசி நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி

இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான  தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில்(என்பிசிசி) நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி

வேலைவாய்ப்பு

என்பிசிசி நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி

இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான  தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில்(என்பிசிசி) நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:



இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில்(என்பிசிசி) நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.03/2021

பணி: MANAGEMENT TRAINEE (CIVIL)
காலியிடங்கள்: 25

பணி: MANAGEMENT TRAINEE (ELECTRICAL) 
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:  2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரு.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/Advt_MT_Civil_Elec_17032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →