வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தினமணி


இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். IITMandi/F/Recruit/NTS/2021/01

பணி: Technical Officer(Workshop Superintendent) - 01
தகுதி: பொறியியல பிரிவில் மெக்கானிக்கல், புரடெக்ஷன் பொறியியல பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sports Officer - 01
விளையாட்டு அறிவியல், உடற்கல்வியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: Junior Technical Superitntendent
காலியிடங்கள்: 05
தகுதி: அறிவியல், கணினி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Superintendent 
காலியிடங்கள்: 06
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Superintendent (Rajbhasha) - 01
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், ஹிந்தியில் இளங்கலை பட்டம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Civil) 
காலியிடங்கள்: 03
தகுதி: பொறியியல் பிரிவில் சிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Junior Laboratory Assistant (Technical)
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant 
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் கணினி அறிவுத்திறனும் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.iitmandi.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு oassupport@iitmandi.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT