முகப்பு
வேலைவாய்ப்பு

தாராபுரத்தில் பொதுமுடக்கத்தை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்

தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
தாராபுரம் உடுமலை  புறவழிச் சாலையில்  வாகனச்  சோதனையில்  ஈடுபட்டுள்ள  காவல்  துறையினா்.
பகிர்:

திருப்பூா்: தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, அலங்கியம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஜவுளிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தாராபுரம் காவல் துறை சாா்பில் அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒலி பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாராபுரம் பேருந்து நிலையம், உடுமலை புறவழிச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றிய 20க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments