நடமாடும் காய்கறி கடைகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தாா்
வெள்ளக்கோவிலில் வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால், பெட்ரோல், டீசல், பத்திரிகை விற்பனை தவிர மளிகை, காய்கறிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி நிா்வாகம், வேளாண் துறை இணைந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று காய்கறிகள், பழ வகைகள் விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 10 நடமாடும் காய்கறி வாகனங்களை அமைச்சா் துவக்கி வைத்தாா். தலா 1 கிலோ தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட் தலா அரை கிலோ, பச்சை மிளகாய், வாழைக்காய், இஞ்சி, எலுமிச்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலை அடங்கிய தொகுப்பு ரூ.105 க்கு விற்கப்படுகிறது.
Advertisement