வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம்

தினமணி


திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்வரும் விவரங்கள்படி காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்தகால அடிப்படையில் தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மருத்துவ அலுவலர் - 02
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000

பதவி: செவிலியர் - 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஸ் முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.14,000

பதவி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 02
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.6,000 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:  http://www.samayapurammariammantemple.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2021
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

மனுவை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT