முகப்பு
வேலைவாய்ப்பு

மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு: 12ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தன்னாட்சி அங்கீராரம் பெற்ற தியாகராசர் கல்லூரியில் ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு: 12ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தன்னாட்சி அங்கீராரம் பெற்ற தியாகராசர் கல்லூரியில் ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:


மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தன்னாட்சி அங்கீராரம் பெற்ற தியாகராசர் கல்லூரியில் ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் விவரம்: 

1. இளநிலை உதவியாளர்
2. தட்டச்சர்
3. ஆய்வுக்கூட உதவியாளர்
4. பதிவறை எழுத்தர்
5. நூலக உதவியாளர்
6. அலுவலக உதவியாளர்
7. பெருக்குபவர்
8. காவலர்
9. குடிநீர் கொணர்பவர்
10. துப்புரவாளர்
11.தோட்டக்காரர்
12. குறியீட்டாளர்

சம்பளம்: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது. 

வயதுவரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.tcarts.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140, காமராசர் சாலை, தெப்பக்குளம், மதுரை - 9

மேலும் விவரங்களுக்கு www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →