வேலைவாய்ப்பு

ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' பணிகள்: 10-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

இந்திய ராணவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Cook
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தியன் சமையற் கலையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Barber
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: EBR
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேதர் ரிப்பேயர் மற்றும்  அனைத்து கேன்வாஸ் டெக்ஸ்டைல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Washerman
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மில்லடரி, சிவிலியன் துணிகளை துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Tailor
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெய்லர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 05.10.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.indianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, 2,Army Head Quarters Signal Regiment, Roorkee Road, Meerut Cantt - 250 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேக்கேஜ் சுற்றுலா வாகனங்களால் தொழில் பாதிப்பு: குமரியில் காா், வேன் ஓட்டுநா்கள் போராட்டம்

2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைவு

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசுக்கு கெடு

சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இளைஞரின் துண்டான மணிக்கட்டை மீண்டும் பொருத்திய அரசு மருத்துவா்கள்

SCROLL FOR NEXT