மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளார் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளார் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
விளம்பர எண்.12/2021
Advertisement
மொத்த காலியிடங்கள்: 28
பணி: மண்டல இயக்குநர் - 01
பணி: மத்திய உளவுத்துறை துணை அதிகாரி - 10
பணி: உதவி பேராசிரியர் (வேதியியல்- 01, எலக்ட்ரிக்கல் - 01, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 02, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் - 01, கணிதம் - 01, உற்பத்தி - 01, மெக்கானிக்கல் - 01),
பணி: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் - 03
பணி: ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் - 03
பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் - 03
தகுதி, வயதுரம்பு, பணி அனுபவம் ஒவ்வொரு பணிவாரியாக மாறுபடுவதால் அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2021
மேலும் விபரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjY4XKJLSPMXUFCCXAHCAANYIWKN5GD9CVXAIQIDZ3CS6A1IQK2LAO என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.