இந்திய ரிசர்வ் வங்கி 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் (ராஜ்பாஷா) மற்றும் உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) கிரேடு ‘ஏ’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் (ராஜ்பாஷா) மற்றும் உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) கிரேடு ‘ஏ’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Manager (Rajbhasha)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: இந்தியில் முதுநிலைப் பட்டம். மொழிப்பெயர்ப்பு பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணி: Assistant Manager (Protocol & Security)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: இந்திய ராணுவம், விமானம், கடற்படையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்டு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100. ஆர்பிஐ பணியாளர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4105 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT