வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: என்பிசிஐஎல் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 225 எக்ஸ்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 225 எக்ஸ்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். NPCIL/HRM/ET/2022/02

பணி மற்றும் காலியிடங்கள் விவரங்கள்: 
பணி: Executive Trainees
காலியிடங்கள்: 225
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மெக்கானிக்கல் - 87
2. கெமிக்கல் - 49
3. எலக்ட்ரிக்கல் - 31
4. எலக்ட்ரானிக்ஸ் - 13
5. இன்ஸ்ட்ருமெண்டேஷன் - 12
6. சிவில் - 33

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.04.2022 தேதியின்படி பொதுப் பிரிவினர் 26க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 29க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 31க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் 2020, 2021 அல்லது   2022 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/ETHQ2022/documents/advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT