bpcl-1652937516090254 
வேலைவாய்ப்பு

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Executive (Operations)
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Executive (Accounts)
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ, சிஎம்ஏ போன்ற ஏதாவதொரு படிப்பை முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா....? | ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
 
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினரைத் தவிர மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.bharatpetroleum.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT