ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் தமிழக சுகாதாரத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக சுகாதார துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தமிழக சுகாதார துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அறிக்கை எண்: 2/MRB/2022 தேதி: 20.01.2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Advertisement
பணி: VILLAGE HEALTH NURSE /AUXILIARY NURSE MIDWIFE
காலியிடங்கள்: 39
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏஎன்எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 59க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் ஓட்டுநர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் விவரம் : பத்தாம் வகுப்புக்கு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022
மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?