ரூ.38,500 சம்பளத்தில் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் சூப்பர்வைசர் வேலை
கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். MAPS/HRM/1/2022
பணி: Fixed Term(Supervisor) Appointees - 02
சம்பளம்: மாதம் ரூ.38,500
வயதுவரம்பும்: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager(HRM), HR Section, Madras Atomic Power Station(MAPS), Kalpakkam, Tamilnadu - 603 102
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 24.02.2022