வேலைவாய்ப்பு

தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலை வேண்டுமா? 

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்பிசிசி) காலியாக உள்ள உதவி மேலாளர், சீனியர் திட்ட அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்

தினமணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்பிசிசி) காலியாக உள்ள உதவி மேலாளர், சீனியர் திட்ட அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் (என்பிசிசி)

மொத்தக் காலிப் பணியிடம் : 11

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager (Software Developer) - 04
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப்பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். 

பணி: Sr. Project Executive (Information Technology) - 02
தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Manager (Law) - 03
தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2022

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.com அல்லது https://www.nbccindia.com/pdfData/jobs/01_2022_AMSoftware_SPEIT_AMLAW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT