NIPER-இல் பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் Nationala Pharamaceutical Research & Education(NIPER) கல்லூரியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மருந்து ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் (NIPER) கல்லூரியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NIPER-HYD/01/2021-22
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist/Technical Supervisor Grade-I/II - 05
வயதுவரம்பு: கிரேடு-I பணிக்கு 40க்குள்ளும், கிரேடு-II பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant(Computer Section) - 01
பணி: Accountant - 02
பணி: Receptionist Cum Telephone Operator - 01
பணி: Store Keeper - 01
பணி: Assistant Grade-I - 01
பணி: Assistant Grade-II - 03
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Technical Assistant - 04
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்க | பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தகுதி: எம்.எஸ்சி., எம்.பார்ம்., எம்.வி.எஸ்சி.,போன்ற ஏதாவதொரு படிப்புடன் 4 ஆண்டு ஆராய்ச்சி அல்லது ஆசிரியர் அனுபவம் பெற்றிப்பவர்கள், கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், பி.காம் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள், பி.காம், பி.எஸ்சி., முடித்து 3 ஆண்டு அனுபவம் பெற்றிருபவர்கள், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niperhyd.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2022