வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழக அரசில் ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் வேலை

தினமணி

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள கெமிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 

பணி: Chemist 

காலியிடங்கள்: 03 

சம்பளம்: மாதம் ரூ.37,700 - ரூ.1,19,500 

தகுதி: வேதியியல் பிரிவில் எம்,எஸ்சி., அல்லது கெமிக்கல் டெக்னாலஜி அல்லது இன்ஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது வேதியியலாளர்கள் நிறுவனத்தின் அசோசியேட்ஷிப் டிப்ளோமா(இந்தியா) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தூய அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 - 50க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் - ரூ.150 தேர்வுக் கட்டணம் - ரூ.200

விண்ணப்பிக்கும் முறை : https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022

தேர்வு நடைபெறும் தேதி: 19.03.2022 

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/21_2021_CHEMIST_ENGLISH.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT