இஎஸ்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் கிளார்க், எம்டிஎஸ் வேலைகள்: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இஎஸ்ஐசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3847 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புஇஎஸ்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் கிளார்க், எம்டிஎஸ் வேலைகள்: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இஎஸ்ஐசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3847 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இஎஸ்ஐசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3847 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 3847 (தமிழ்நாட்டிற்கு 385)
பணி: Upper Division Clerk
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பணி: Stenographer
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் விகிதம் 10 நிமிடத்தில் சுருக்கொழுத்தில் எழுதி அதை 50 நிமிடங்களில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி: Multitasking Staff
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இஎஸ்ஐசி நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, கணினி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சுருக்கெழுத்தர் பணிக்கு எழுத்துத் திறன் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிபிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 115.02.2022
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.1 லட்சம் சம்பளத்தில் யுஜிசியில் வேலை வேண்டுமா?