வேலைவாய்ப்பு

மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் 600 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

அரசுக்கும், மீனவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, தமிழக அரசின் மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


அரசுக்கும், மீனவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, தமிழக அரசின் மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சாகர் மித்ரா(Sagar Mitra)

காலியிடங்கள்: 600

தகுதி: மீன்வளத்துறையில் மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000 + 5,000

வயது வரம்பு:  35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.fisheries.tn.gov.in என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து  உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி வாக்களித்தார்!

செப். 13-ல் சுற்றுப்பயணம் தொடங்கும் விஜய்! வார இறுதி நாள்களில் மட்டும் பிரசாரம்!

புதுமைப் பெண் திட்டம்! விண்ணப்பிக்க தகுதி என்ன?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும்: பிரதமர்!

SCROLL FOR NEXT