முகப்பு
வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் இன்ஜினியர் வேலை

தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
கோப்புப்படம்
பகிர்:


தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்ர எண்.NH/Rectt./04/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Trainee Engineer (Civil)
காலியிடங்கள்: 29

பணி: Trainee Engineer (Mechanical)
காலியிடங்கள்: 20

பணி: Trainee Engineer (Electrical)
காலியிடங்கள்: 04

பணி: Trainee Officer (Finance)
காலியிடங்கள்: 12

பணி: Trainee Officer (Company Secretary)
காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபுள்யுஏ, சிஎம்ஏ முடித்தவர்கள், கம்பெனி செகரட்டரிஷிப் பிரிவில் தேர்ச்சி பெற்று ஐசிஎஸ்ஐ -இல் உறுப்பினராக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் GATE-2021 மதிப்பெண்கள் டிரெய்னி அலுவலர் பணிக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →