விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 400 காலியிடங்கள்
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத இளநிலைப் பட்டதாரிகள் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பிக்கவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive(Air Traffic Control)
காலியிடங்கள்: 400
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 14.07.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: இயற்பியல் அல்லது கணிதப் பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.81 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு செய்யப்படும் முறை: விமான நிலையங்கள் ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஐசிஏஓ மொழித் தேர்வு திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2022