வேலைவாய்ப்பு

நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?

பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள  செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள  செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும், 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பர எண்.140

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Nursing Staff
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பி.எஸ்சி நர்சிங் படிப்புடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பிஎஸ்சி நர்சிங்க் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தங்களது படிப்பை மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Chittaranjan National Cancer Institute(CNCI), Kolkata - 700 156.

நேர்முகத் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:  Senior Nursing Staff பணிக்கு 07.06.2022 மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

காதல்மயம்... கிகி விஜய்!

மறக்க முடியாதது... சாரா யஸ்மின்!

SCROLL FOR NEXT