வேலைவாய்ப்பு

ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலைத்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

இராமநாதபுரம் மாவட்டம் , ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மருத்துவ அலுவலர் - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.90,000 வழங்கப்படும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: செவிலியர் - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.6,000 வழங்கப்படும். 

மேலும் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் - 623 526, இராமநாதபுரம் மாவட்டம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.03.2022
 
மேலும் விவரங்கள் அறிய https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT