தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப் திட்ட பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப் திட்ட பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Fellows
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fellows
காலியிடங்கள்: 114
சம்பளம்: மாதம் ரூ.32,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
பணிக்காலம்: ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். பணிபுரியும் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnschools.gov.in/wp-content/uploads/2022/04/TN-Education-Fellowship-Tamil-Apr-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.