வேலைவாய்ப்பு

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் உளவியலாளர் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தினமணி



தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூன் 16 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உளவியலாளர்

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,06,700

தகுதி: உளவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2022

கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்: 06.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/PSY%20Tamil%20PDF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT