முகப்பு
வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? எஸ்பிஐ வங்கியில் புதிதாக 665 காலியிடங்கள் அறிவிப்பு!

வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 665 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:


வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 665 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 665 
1. Manager (Business Process) - 1
2. Central Operations Team - Support - 2
3. Manager (Business Development) - 2
4. Project Development Manager (Business) - 2
பணியிடம்: மும்பை
வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. Relationship Manager - 335
6. Investment Officer - 52
7. Senior Relationship Manager 147
8. Relationship Manager (Team Lead) - 37
9. Regional Head - 12
10. Customer Relationship Executive - 75
வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.09.2022

மேலும், விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.