வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய உணவுக் கழகத்தில் 5,043 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

தினமணி


இந்திய உணவுக் கழகத்தில் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தர் என 5,043 பணியிடங்களுக்கான வேலைவாப்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மண்டலங்களில் காலியாக உள்ள 5,043 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலியிடங்கள்: 5,043

மண்டலம் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. வடக்கு மண்டலம் -  2,388
2. தெற்கு மண்டல் - 989
3. கிழக்கு மண்டலம் -  768
4. மேற்கு மண்டலம்  - 713
5. தென்கிழக்கு மண்டலம் - 185

பணி: இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)
வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சுருக்கெழுத்தாளர் நிலை -II
வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும்,  நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவியாளர் நிலை-III (பொது)
பணி: உதவியாளர் நிலை-III (கணக்கு) 
பணி: உதவியாளர் நிலை-III (டெக்னிக்கல்)
பணி: உதவியாளர் நிலை-III (தானிய கிடங்குகள்)
உதவியாளர் நிலை-III (இந்தி)
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பத்தாரர்கள் ஏதாவதொரு மண்டபத்தில் உள்ள ஏதாவதொரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ், எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT