வேலைவாய்ப்பு

சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர்(ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை

தினமணி


தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர்(ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: சிறை அலுவலர்(ஆண்கள்)  - 6

பதவி: சிறை அலுவலர்(பெண்கள்) 2

சம்பளம்: மாதம் ரூ.38,900 - 1,35,100

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை. ஏனையோர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 22.12.2022 முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும்,  பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைக்குச் செல்லும் நபர்களுக்கான சுகாதார காப்பீட்டின் (Health Insurance) முக்கியத்துவம்

பாயும் புலி... ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்!

மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்

தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தினால் தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையா? - கனிமொழி

பிகாரில் ஒரு வாக்குகூட திருடப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: ராகுல்

SCROLL FOR NEXT