ரூ.68 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் உதவி பேராசிரியர் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 12
Advertisement
Advertisement
நிர்வாகம் : தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் (NIAMT)
பணி: உதவி பேராசிரியர்
சம்பளம்: மாதம் ரூ.57,700 - ரூ.68,800
தகுதி: பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் எம்.எஸ்சி, பி.இ, பி.டெக், பி.எஸ், எம்.இ, எம்.டெக், எம்,எஸ், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழக அரசில் ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை: www.nifft.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து recruitment@nifft.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய http://nifft.ac.in அல்லது http://nifft.ac.in/WriteReadData/Contractual%20Faculty-23122021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா? - ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை