வேலைவாய்ப்பு

திருப்பதி ஐஐடி-இல் வேலை வேண்டுமா? 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பதி இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கல்லூரி திருப்பதியில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். IITT/STAFF/REC/01/2024

பணி: Student Counsellor

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் கிளினிக்கல் சைக்காலஜியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கிளினிக்கல் சைக்காலஜி, சமூகவியல் கல்வியில் தொடர்புடைய மனநலப் பாதுகாப்பு மருத்துவ மனையில் அல்லது கிளினிக்கல் சைக்காலஜியில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் எம்.பில் முடித்து கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம், மனநலப் பராமரிப்பு மருத்துவமனை, தொடர்புடைய ஆலோசனை சேவை அமைப்புகளை நிர்வகிப்பது போன்றவற்றில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hindi Translator

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்ப்பு செய்வதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Tecnician

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Nursing Officer

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஜிஎன்எம் படிப்பை முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ஹிந்தி மொழிபெயர்பாளர் பணிக்கு ரூ.300. இதர பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iittp.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT