வேலைவாய்ப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

டாடா மெமோரியல் சென்டர் (டிஎம்சி) என்ற ஒரு தன்னாட்சி அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் நோயாளி பராமரிப்பு, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் புற்றுநோயியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்தை அடையும் நோக்கத்துடன் கூடிய ஒரு விரிவான புற்றுநோய் மையமான டாடா மெமோரியல் சென்டர் (டிஎம்சி) என்ற ஒரு தன்னாட்சி அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். TMC/AD/52/2024

பணி: Female Nurse 'A'

காலியிடங்கள்: 58

சம்பளம்: மாதம் ரூ.44,900

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொது நர்சிங் பாடத்தில் பி.எஸ்சி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.25,200

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 3 மாத கணினி படிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.மேலும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: LOWER DIVISION CLERK

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு எழுத்தர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தெரிந்திருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MEDICAL PHYSICIST ‘C’

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல் மற்றும் கதிரியக்க இயற்பியல் ஏதாவதொன்றில் எம்.எஸ்சி அல்லது அதற்கு சமமான கதிரியக்க இயற்பியல் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்று நவீன தொழில்நுட்பத்துடன் மருத்துவ இயற்பியலாளராக 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician 'A'

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் உணவக மேலாண்மை பாடத்தில் டிப்ளமோ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் எண்டோஸ்கோப்பி மருத்துவப் பிரிவில் டிப்ளமோ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician 'C'

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,500

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஐசியு, ஒடி, எலக்ட்ரானிக்ஸ், டயலாஜிஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: wwww.tmc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT