கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

தெற்கு ரயிவேயில் அப்ரண்டிஸ் பயிற்சி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

ரயில்வே பணிமனைகளில் 10, +2, ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

DIN

தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை, பெரம்பூர், கோயம்புத்தூர், சேலம், அரக்கோணம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு போன்ற இடங்களிலுள்ள ரயில்வே பணிமனைகளில் 10, +2, ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: ITI Trade Apprentice (Fresher/Ex-ITI)

காலியிடங்கள்: 2438

1. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337

2. மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379

3. சிக்னல் மற்றும் டெலிகாம் பணிமனை, போதனூர் - 722

பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள்

1. Fitter

2. Turner

3. Machinist

4. Welder (Gas & Electric)

5. Welder

6. Electrician

7. Electronics Mechanic

8. Plumber

9. Diesel Mechanic

10. Painter(General)

11. COPA

12. Wireman,PASAA

13. Carpenter

14. Mechanic-Refrigeration & Air Conditioning

15. ICTSM (Information & Communication Technology System Maintenance)

16. Steno,Secretarial Assistant

17. MLT(Radiology, Pathology, Cardiology)

தகுதி:

Ex-ITI பிரிவிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

Fresher (Non-ITI) பிரிவிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்எல்டி பிரிவிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தது 50 சதவீகித மதிப்பெண்களுடன் அறிவியல்,கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Ex-ITI-க்கு 15 முதல் 24 வயதிற்குள்ளும்,Non-ITI-க்கு 15 முதல் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 10, பிளஸ், ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.08.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பல் வண்ணப் பூவே... நேகா ஜேத்வானி!

மென்மையான பெண் என்ற காலம் முடிந்தது... ரியா சக்கரவர்த்தி!

புத்தம்புது காலை... ஹெலி ஷா!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

மம்மூட்டியின் களம்காவல் பட வெளியீடு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT