மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) 
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 2006 சுருக்கெழுத்தர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2006 சுருக்கெழுத்தாளர் கிரேடு 'சி' மற்றும் 'டி' பணியிடங்களுக்கான சுருக்கெழுத்து தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

DIN

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2006 சுருக்கெழுத்தாளர் கிரேடு 'சி' மற்றும் 'டி' பணியிடங்களுக்கான சுருக்கெழுத்து தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு பெயர்: Stenographer Grade 'C' and 'D' Exam - 2024

பணி: Stenographer

காலியிடங்கள்: 2006

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 முதல் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி சுருக்கெழுத்தர் கிரேடு 'சி' பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். கிரேடு 'டி' பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

உடற்தகுதி: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 75 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி-ஆல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சுருக்கெழுத்தர் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் - நவம்பர் 2024

தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

தாளம்பாடியில் சாதிப் பெயருடைய தெருக்களின் பெயா் மாற்றம்

சபரிமலை தங்கக் கவச சா்ச்சை: 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருக்கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1,502 கோடி வழங்கிய உபயதாரா்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்கும்: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT